சென்னை, புதுச்சேரியில் முழுவீச்சில் நடந்த பாதுகாப்பு ஒத்திகை

சென்னை, புதுச்சேரியில் முழுவீச்சில் நடந்த பாதுகாப்பு ஒத்திகை
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும் புதுச்சேரியிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

சென்னையில் துறைமுக வளாக கட்டத்திலும் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் அருகேயும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

சைரன் ஒலி எழுப்புதல், வான்வழி தாக்குதல் ஏற்பட்டால் மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஒத்திகை செய்யப்பட்டது.

இந்த பாதுகாப்பு ஒத்திகையை இந்திய கடற்படை, மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர், தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், தமிழ்நாடு போலீஸ் கமாண்டோ படை உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு