You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உதகை அருகே கட்டுமான பணியின் போது விபத்து - 7 பேர் பலியானது எப்படி?
உதகை அருகே கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம், லவ்டேல் காந்தி நகரில் வீடு ஒன்றிற்கு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக மண்ணை தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது மண் சரிவு ஏற்பட்டு அருகே உள்ள பழைய நகராட்சி கழிப்பிட கட்டிடம் இடிந்து விழுந்தது.
கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நான்கு தொழிலாளர்கள் சிகிச்சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
உதகை- லவ்டேல் பகுதியில் தனியார் கட்டட கட்டுமான பணிக்கிடையே நடந்த நிலச்சரிவில் 7பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
"உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மலைப்பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கொடுக்கும் போது, அந்த இடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்த வேண்டும்," என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹50,000 வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)