4 பந்துகளில் என்ன 'மாயம்' செய்தார் தோனி? – காணொளி

4 பந்துகளில் என்ன 'மாயம்' செய்தார் தோனி? – காணொளி
பிரசுரிக்கப்பட்டது

சி.எஸ்.கே-வின் டேரில் மிட்செல் ஆட்டமிழந்ததும் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானம் குலுங்கியது. அவர் பெவிலியன் திரும்பியது பெரும்பாலான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கவில்லை என்பது மைதானம் அதிர்ந்ததின் மூலமாக அறிய முடிந்தது. பிறகு ஏன் இவ்வளவு ஆர்ப்பரிப்பு. எல்லாம் சி.எஸ்.கேவின் நட்சத்திரம் தோனியின் என்ட்ரிக்காகத்தான்.

‘தோனி… தோனி…’ என ரசிகர்களின் முழக்கங்களுக்கு நடுவே கடைசி ஓவரில் களமிறங்கினார் தோனி.

அவருக்கு வெறும் 4 பந்துகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் அதுவே ரசிகர்கள் மெச்சும் அளவுக்கு மாற்றிவிட்டார் தோனி.

ஹர்திக் வீசிய கடைசி ஓவரின் 3-வது பந்து. அதுதான் தோனி எதிர்கொண்ட முதல் பந்து. புத்திசாலித்தனமாக ‘Slower Delivery’ வீசினார் ஹர்திக். ஆனால் அது தோனியை தடுமாறச் செய்யும் அளவுக்கு இருக்கவில்லை. லாங் ஆஃபில் ஓங்கி அடித்த பந்து சிக்சருக்கு பறந்தது. தோனி மைதானத்திற்கு நுழையும்போது குலுங்கிய மைதானம் இயல்பு நிலைக்குத் திரும்பாமலேயே இருந்தது.

ஹர்திக் வீசிய அடுத்த பந்து, நேராக ஸ்லாட்டில் விழுந்தது. லாங்க்-ஆனில் மீண்டும் சிக்சருக்கு பந்தை அனுப்பினார் தோனி. ரசிகர்களுக்கு இதுபோதுமே என வர்ணணையாளர்கள் விவரித்தனர். ஆனால் இன்னும் 2 பந்துகளே எஞ்சியிருந்தன.

அப்போது என்ன செய்தார் தோனி?

முழு விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)