ஆயிஷா: சென்னையில் இந்தியரின் இதயம் பொருத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் கூறுவது என்ன?

ஆயிஷா: சென்னையில் இந்தியரின் இதயம் பொருத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு 69 வயது இந்தியரின் இதயம் தமிழ்நாட்டில் பொருத்தப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் நட்பு நாடுகளாக பார்க்கப்படாத நிலையில் இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஆயிஷா ரஷீதுக்கு ஏழு வயதில் 25% இருதய பாதிப்பு இருந்தது. 2019-ம் ஆண்டு சென்னை வந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பின் செயற்கை இதய துடிப்பு கருவி பொருத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் புதிய தொற்று ஏற்பட்டதால் அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது அவசியமானது.

இன்னும் இரண்டு மாதங்களில் வீடு திரும்பவுள்ள ஆயிஷா, இந்தியாவில் இருப்பதில் தனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை என்கிறார்.

சுமார் 35 லட்சம் செலவாகியிருக்கும் இந்த அறுவை சிகிச்சை ஆயிஷாவுக்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)