பிரசாதமாக தரப்படும் மீன் - ஆஸ்துமாவை குணப்படுத்தும் என்பது உண்மையா? - காணொளி

காணொளிக் குறிப்பு, பிரசாதமாக தரப்படும் மீன் - வாங்குவதற்கு குவியும் மக்கள்
பிரசாதமாக தரப்படும் மீன் - ஆஸ்துமாவை குணப்படுத்தும் என்பது உண்மையா? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

மீனை மருந்தாக எடுத்துக்கொள்வது ஆஸ்துமாவை குணப்படுத்தும் என்று சிலர் நம்புகின்றனர். எனவே, ஐதராபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மீனை மருந்தாக வழங்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். மீனை மருந்தாக வழங்கும் இந்த நிகழ்வு தெலுங்கு நாட்காட்டியில் ம்ருகசிர கர்த்தேயின் தொடக்கத்தில் தொடங்குகிறது. ஹைதராபாத்தில் உள்ள பழைமையான நகரைச் சேர்ந்த பட்டினா குடும்பம் இதில் ஈடுபட்டு வருகின்றனர். 1847 ஆம் ஆண்டு ஹைதராபாத் வந்த ஒரு துறவி மீன் மூலம் மருந்து தயாரிக்கும் ரகசியத்தை தங்கள் முன்னோர்களுக்கு தெரிவித்ததாக என்று பட்டினி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

மீன் பிரசாதம் என்று கூறப்படும் இதனை ஆரம்பத்தில் மீன் மருந்து என்றே குறிப்பிட்டனர். எனினும், கடந்த 20 ஆண்டுகளாக அலோபதி மருத்துவர்கள், அறிவியல் பரப்புரையாளர்கள், மூடநம்பிக்கைக்கு எதிரான ஜன விஞ்ஞான வேதிகா போன்ற அமைப்புகள் ஆகியன மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்ததோடு , மருந்து என்பதற்கான ஆதாரப்பூர்வ ஆதாரத்தையும் கோரின.

இது தொடர்பாக ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தங்களுக்கு எதிராக அலோபதி மருந்து நிறுவனங்கள் செய்யும் சதி என இதனை பட்டினி குடும்பத்தினர் வாதாடினர்.

நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்னர், மீன் மருந்து என்பதை மீன் பிரசாதம் என்று பட்டினி சகோதரர்கள் பெயர் மாற்றம் செய்தனர்.

இதுபோன்ற சர்ச்சைகளால் மீன் பிரசாதத்தை சாப்பிடும் தெலுங்கு மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் லட்சங்களில் இருந்த எண்ணிக்கை தற்போது சில ஆயிரங்களாக சுருங்கிவிட்டது. தற்போது உள்ளூர் மக்கள் யாரும் அதிகளவில் இங்கு வருவதில்லை. வட மாநிலங்களில் இருந்துதான் மக்கள் அதிகம் வருகின்றனர்.

மீன் பிரசாதம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: