உலகக் கோப்பையை வெல்லப்போவது மெஸ்ஸியின் அர்ஜென்டினாவா அல்லது எம்பாப்பேவின் ஃபிரான்ஸா?

கத்தார் கால்பந்து

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

கத்தாரின் லுசைல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8.30க்கு நடக்கவிருக்கும் அர்ஜென்டினா-பிரான்ஸ் இடையேயான இறுதி போட்டியை உலக கால்பந்து ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த இரு அணிகள் இறுதி போட்டியில் களம் காண்பதால் போட்டி தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இருக்கப்போவது உறுதி.

அர்ஜென்டினாவின் கால்பந்து கதாநாயகர் மெஸ்சி தனது 35ஆவது வயதில் இருக்கிறார். இதுவரை அவர் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான பலோன் டி'ஓர் விருதினை ஏழுமுறை வென்றுள்ளார். எனினும் ஒருமுறை கூட உலகக் கோப்பை போட்டியில் மிகப்பெரிய அணிக்கான பரிசை அவர் வென்றதில்லை.

"ஃபிரான்ஸ் அணியே தங்களுக்கு விருப்பமான அணி என சிலர் சொல்லலாம். ஆனால், எங்களிடம்தான் ஆகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இது எங்களுக்கு சாதகமான ஒன்று," என்கிறார் அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்.

"ஏனென்றால் நாங்கள் யாரையும் விட உயர்ந்தவராகவோ தாழ்வாகவோ உணரவில்லை. ஆகவே, எதிரணிதான் விருப்பமான அணி என்று கேட்பதையே நாங்கள் எப்போதும் விரும்புகின்றோம்," என்றும் கூறினார்.

" ஆனால், நான் எப்போதுமே நாங்கள்தான் ஆக சிறந்த அணி என்று சொல்வேன்," என்று உறுதிபடக் கூறும் எமிலியானோ மார்டினெஸ், "சிறந்த தடுப்பாட்டத்துடன், எங்கள் இலக்கை அடைவதற்கு எங்களுக்கு சாதகமாக பல வாய்ப்புகள் உள்ளன," என்றும் தெரிவித்தார்.

மெஸ்ஸி

பட மூலாதாரம், PA Media

1998ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. அப்போது அணியின் கேப்டனாக டிடியர் டெஷாம்ப்ஸ் இருந்தார். இப்போது அவர்தான் பிரான்ஸ் அணியின் மேலாளராக இருக்கிறார். அவருடைய வழிகாட்டுதலில்தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் பிரான்ஸ் மேலும் ஒரு வெற்றியைப் பெற்றது.

"அர்ஜென்டினா அணியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் மட்டுமின்றி சில பிரான்ஸ் நாட்டு மக்களும் கூட லியோனல் மெஸ்ஸிதான் உலகக் கோப்பையை வெல்வார் என்கின்றனர். ஆனால், எங்களுடைய நோக்கத்தை அடைய முழு மூச்சுடன் செயல்படுவோம்," என்றார் பிரான்ஸ் மேலாளர்.

உலகக் கோப்பையை அர்ஜென்டினா வெல்ல மெஸ்ஸி உதவுவாரா?

இந்த தொடரில் மெஸ்ஸியும், ஃபிரான்ஸின் எம்பாப்வேயும் தலா 5 கோல்கள் அடித்து சமநிலையில் உள்ளனர். எனவே இந்த இறுதிப் போட்டியில் அதிக கோல்களை எடுத்த வீரர் யார்? என்ற கேள்விக்கான விடையும் தெரிந்துவிடும்.

ஃபிரான்சின் ஒலிவியர் ஜிரோட் மற்றும் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரெஸ் ஆகியோர் தலா நான்கு கோல்கள் அடித்து தங்களின் அணிகளுக்கு பக்கபலமாக உள்ளனர்.

மெஸ்ஸி இதற்கு முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தனது அர்ஜென்டினா அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். ஜெர்மனியின் மரியோ கோட்ஸே ஒரே ஒரு கோலைப் போட்டாலும், கூடுதல் நேரத்திற்குப் பிறகு ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் அர்ஜென்டினா கடந்து வந்த பாதை

அர்ஜென்டினா

பட மூலாதாரம், Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கத்தாரில் நடைபெற்று வரும் தற்போதைய உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகிறார் மெஸ்ஸி.

செளதி அரேபியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வியடைந்து, பின்னர் மெக்சிகோவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து அர்ஜென்டினா, 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தைத் தோற்கடித்தது, குழு C பிரிவில் முதலிடம் கண்டது, அதன்பின் ரவுண்ட் 16 நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்றது.

காலிறுதியில் நெதர்லாந்து உடனான போட்டி அர்ஜென்டினாவுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. போட்டியில் 82 நிமிடங்களுக்குப் பிறகு 2-0 என முன்னிலையில் அர்ஜென்டினா இருந்தது. ஆனால் நெதர்லாந்தின் வூட் வெகோர்ஸ்ட் இரண்டு முறை கோல் அடித்தார். சம நிலையில் பெனால்டியில் 4-3 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்றது.

அரையிறுதியில் குரோஷியா அணியுடனான போட்டியில் மெஸ்ஸியின் ஒரு கோல், அல்வாரெஸின் இரண்டு கோல்கள் உதவியுடன் 3-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றிப் பெற்றது. அர்ஜென்டினா இதுவரை இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1978ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியிலும், 1986 ஆம் ஆண்டு மெக்சிக்கோவில் நடந்த போட்டியிலும் கோப்பையை வென்றுள்ளது. இன்றைய போட்டியில் மூன்றாவது வெற்றியை எதிர்பார்த்து அர்ஜென்டினா காத்திருக்கிறது. "நாங்கள் வெல்வோம் என்று நம்புகின்றோம், அது முடியாவிட்டாலும் அணி வீரர்கள் பெருமையடைய வேண்டும். ஏனென்றால் இது அனுபவிப்பதற்கான ஒரு தருணம்," என நடைமுறையை புரிந்து கொண்டவராக சொல்கிறார் அணியின் மேலாளர் லியோனல் ஸ்கலோனி.

ஃபிரான்ஸின் முன்னெடுப்புகளைத் தடுக்கிறதா நோய்தொற்று?

ஃபிரான்ஸை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியுள்ள 23 வயதான எம்பாப்பே, தனது இரண்டாவது உலகக் கோப்பை வெற்றியை சுவைக்க இன்று போராடுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-1 வெற்றியில் ஒரு முறையும், டென்மார்க்கிற்கு எதிரான 2-1 என்ற போட்டியில் இரண்டு முறையும் அவர் கோல் அடித்தார்.

காலிறுதியில் இங்கிலாந்தின் வலுவான கரேத் சவுத்கேட்டினை எதிர்கொண்டனர் ஃபிரான்ஸ் அணியினர். எனினும் ஆரேலியன் டிச்சௌமேனி அணியை முன்னணியில் நிறுத்தினார். ஆனால் ஹாரி கேன் பெனால்டி மூலம் போட்டியை சமன் செய்தார். கேன் இரண்டாவது ஸ்பாட்-கிக்கை தவறவிட்டாலும் ஆலிவியர் கிராட், பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற வழிசெய்தார்.

அரையிறுதியில் ஃபிரான்ஸ், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியது

1998ஆம் ஆண்டு மற்றும் 2018ஆம் ஆண்டு என இரண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலும் ஃபிரான்ஸ் வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆனால், 2006 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஃபிரான்ஸ் தோல்வியடைந்தது. இப்போது நான்காவது முறையாக இறுதி போட்டிக்குள் ஃபிரான்ஸ் நுழைந்திருக்கிறது.

ஃபிரான்ஸ் அணியின் பக்கபலமாக திகழும் அட்ரியன் ராபியோட், டேயோட் உபமேகானோ மற்றும் கிங்ஸ்லி கோமன் ஆகியோருக்கு ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அணியின் வெற்றியை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

"நாங்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம், அது பரவாமல் இருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம்," என அணியின் மேலாளர் டெஷாம்ப்ஸ் தெரிவித்தார்.

உலகக் கோப்பை வரலாற்றில்

இரு அணிகளும் இதற்கு முன் மூன்று முறை உலகக் கோப்பையில் சந்தித்துள்ளனர். அர்ஜென்டினா 1930 மற்றும் 1978 இல் இரண்டு குழு போட்டிகளிலும் வென்றது. ஆனால் 2018ஆம் ஆண்டு 4-3 என்ற கணக்கில் பிரான்ஸ் தனது ஒரே நாக் அவுட் போட்டியில் வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அவர்கள் 1930, 1990 மற்றும் 2014ல் தோல்வியடைந்தனர்.ஜெர்மனி (எட்டு) மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகமுறை பங்கேற்ற அணி என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

அர்ஜென்டினா அணி சார்பில் இதற்கு முன்பு 1930 இல் கில்லர்மோ ஸ்டேபில் மற்றும் 1978 இல் மரியோ கெம்பஸ் ஆகியோர் கோப்பையை கைப்பற்றினர். இப்போது உலகக் கோப்பையில் அர்ஜென்டினா வென்றால் ‘கோல்டன் பூட்’ வென்ற மூன்றாவது அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெறுவார்.

பிரான்ஸ் நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: