You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலத்தீன பிரச்னை: இஸ்ரேலுக்கு எதிராக போரிடும் வலிமை இரானுக்கு இருக்கிறதா?
இரானும் இஸ்ரேலும் எந்த வகையிலும் தங்கள் நாட்டின் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், இரு நாட்டினரிடமும் இந்த பதற்றமும் மோதல் போக்கும் தொடர்ந்து இருந்து வருகிறது.
இரானும் இஸ்ரேலும் நேரடியாக புவியியல் ரீதியாக இணைக்கப்படவில்லை என்றாலும், இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்துள்ள லெபனான், சிரியா, பாலத்தீனம் உள்ளிட்ட நாடுகளுக்கு இரானின் ஆதரவு இருக்கிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்திய பிறகு, ஏமன், லெபனான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்தது.
இதற்குக் காரணம் இரான் தான் என்கிறது இஸ்ரேல். தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இரான்தான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தூண்டியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
இஸ்ரேலுக்கு தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்துவரும் இரானால், இஸ்ரேலுக்கு எதிராக போரிட முடியுமா?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)