You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"எங்கோ ரத்த வெள்ளத்தில் நான் இறந்து கிடப்பேன் என நினைத்தேன்" (காணொளி)
இந்தச் செய்தி தி நியூஸ்மினிட் செய்தி ஊடகத்துடன் இணைந்து மகளிரிடம் சிறந்த இதழியலை கொண்டு செல்ல BBCShe எடுத்துள்ள முன்னெடுப்பு.
தமிழ்நாட்டை பெறுத்தவரை சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக குறைவாக உள்ளது.
2015ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வில், தமிழ்நாட்டில் வெறும் 3 சதவீத அளவில் மட்டுமே மாற்று சாதி மறுப்பு திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இது தேசிய அளவில் 10 சதவீதமாக உள்ளது.
தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சுய மரியாதை இயக்கத்தை முன்னெடுத்த பெரியாரின் முயற்சிகளுக்கு பிறகும் இந்த நிலையே தொடர்கிறது.
சுய மரியாதை இயக்கம், சாதியை ஒழிக்க சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டில் 1968ஆம் ஆண்டு அண்ணாவின் அரசாங்கத்தில் இந்து திருமணச் சட்டத்தின்படி சுய மரியாதை திருமணம் சட்டப்பூர்வமானது.
இன்றும் பிரமணர்களின் சடங்கு சம்பிரதாயங்களை விடுத்து பலர் சுய மரியாதை திருமணம் செய்து கொள்கின்றனர் ஆனால் இம்மாதிரியான முயற்சிகள் சாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிரான வன்முறையை தடுப்பதற்கு போதுமானதாக இல்லை.
வழக்கறிஞரான ரமேஷ் சாதி மறுப்பு திருமணங்கள் பதிவு செய்ய உதவி வருகிறார். பல நேரங்களில் மாற்று சாதியில் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய தவறுவதால் பல நேரங்களில் அவர்கள் பிரிக்கப்படுகின்றனர்.
செய்தியாளர் - விஷ்ணுபிரியா ராஜசேகர், பிபிசி தமிழ்; நித்யா பாண்டியன், தி நியூஸ்மினிட்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு - ஜெரின் சாமூவேல்
BBCShe தொடர் தயாரிப்பாளர்: திவ்யா ஆர்யா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்