You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜி-7 நாடுகளுக்கு இந்தியா ஏன் முக்கியம்? - காணொளி
இத்தாலியில் ஜூன் 13-ஆம் தேதி துவங்கிய ஜி-7 உச்சி மாநாடு ஜூன் 15-ஆம் தேதி நிறைவடைந்தது.
இஸ்ரேல்-காஸா போர், ரஷ்யா-யுக்ரேன் போர் என உலகில் நிலவும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் ஜி-7 உச்சி மாநாடு இத்தாலியின் பூலியாவில் ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது.
ஜூன் 15-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் கலந்து கொண்டார். பிரதமராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், யுக்ரேன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி, கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து பேசினார்.
ஜீ-7 குழுவில் அங்கம் வகிக்காத போதிலும் இந்தியாவுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதன் பின்னணி என்ன இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)