You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தோனி பட்டை தீட்டும் 'இலங்கை வைரம்` - சி.எஸ்.கே.வுக்கு சிறந்த பவுலராக உருவெடுப்பாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தளவு அதிரடி பேட்ஸ்மேன்களை பார்த்திருக்கிறதோ அதே அளவு அசத்தல் பௌலர்களையும் கண்டுள்ளது.
டக் பொலிஞ்சர், சுட்டி குழந்தை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சாம் கரண் ஆகியோர் வரிசையில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர் இலங்கையைச் சேர்ந்த மத்தீஷ பதிரண. சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின போது, பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
`இலங்கை ரசிகர்களே, பதிரணவிடம் இருந்து முத்தான ஆட்டத்தை நீங்கள் எதிர்பாக்கலாம், தோனி அவரை தயார் செய்துகொண்டிருக்கிறார்` என்பதே அவரது ட்வீட்.
சிஎஸ்கே என்றாலே சீனியர்களின் அணி என்று வழக்கமாக முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கு மாறாக, இந்த முறை ருத்ராஜ், தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங், பதிரண என அணியில் இளைஞர்கள் அதிகம் தென்படுகிறார்கள். தனது தனித்துவமான பந்து வீச்சு மூலம் கவனத்தைச் ஈர்த்துள்ளார் பதிரண ( முழு தகவல்கள் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்