You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பேபி மலிங்கா' என்று அழைக்கப்படும் மத்திஷா பதிரண யார்? - காணொளி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தளவு அதிரடி பேட்ஸ்மேன்களை பார்த்திருக்கிறதோ அதே அளவு அசத்தல் பௌலர்களையும் கண்டுள்ளது. டக் பொலிஞ்சர், சுட்டி குழந்தை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சாம் கரண் ஆகியோர் வரிசையில் தற்போது புதிதாக இணைந்திருப்பவர் இலங்கையைச் சேர்ந்த மத்தீஷ பதிரண.
ஏப்ரல் 17ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே- ஆர்சிபி இடையே நடைபெற்ற ஆட்டத்தை நாம் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டோம். முதலில் பேட்டிங் செய்து 226 ரன்கள் குவித்த போதும், சிஎஸ்கே போராடிதான் வெற்றி பெற்றது.
ஆர்சிபியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஓவரை வீசிய மத்தீஷ பதிரண 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து சுயாஷ் பிரபுதேசாய் விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார். 18, 20வது ஓவர்களை வீசிய அவர் 14 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து சென்னையின் வெற்றிக்கு வழிகோலினார்.
இது குறித்து பின்னர் பேசிய மத்தீஷ பதிரண, `பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின் என் முதல் இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் போயிருந்ததால், நான் சற்று பதற்றமாக இருந்தேன். அப்போது, தோனி என்னிடம் வந்து , கவலைப்படாதே, அமைதியாக இரு, உன் பலத்தை நம்பு என்றார், நானும் அதை செய்தேன்` என்றார்.
பதிரணவின் பந்து வீச்சு தொடர்பான ஒரு வீடியோவை பார்த்து பிடித்துபோய் தோனி அவரை சிஎஸ்கேவில் சேர்த்துகொண்டார் என்று பதிரண பயிற்சி எடுக்கும் ட்ரினிட்டி கல்லூரியில் கிரிக்கெட்டிற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவக்கிய பிலால் ஃபாஸி `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்` ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்