அமெரிக்கா: காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க கடலுக்குள் குதித்த மக்கள் - என்ன நடக்கிறது?

அமெரிக்கா: காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க கடலுக்குள் குதித்த மக்கள் - என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் ஒன்றான மாவியில் பற்றி எரிந்து வரும் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.

பல நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு, அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்துப் பேசிய ஆளுனர் ஜோஷ் கிரீன், "ஹவாய் வரலாற்றிலேயே இது மிக மோசமான இயற்கைப் பேரழிவாக இருக்கிறது," என்றார்.

மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க லஹைனா கடற்கரையில் 80 சதவீத பகுதிகள் தீக்கு இரையாகிவிட்டன என்றும் கூறினார். தீ வேகமாகப் பரவியதால் லஹைனா கடற்கரையில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் குதித்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே பல மணிநேரம் நடந்து தப்பிச் சென்றனர்.

பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அங்கிருந்து மீட்கப்பட்ட நிலையில், தீவின் மேற்குப் பகுதியில் சுமார் 11 ஆயிரம் பேர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தவிக்கும் நிலை உருவானது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: