You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிடிஆர் நிதியமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டது ஏன்?
"தமிழக அமைச்சரவை மாற்றம் முன்கூடியே நடந்திருக்க வேண்டும். சில அமைச்சர்கள் மீது புகார் இருந்தது. சில அமைச்சர்கள் செயல்படவில்லையெனக் கூறப்பட்டது. உளவுத் துறை மூலமாக இதெல்லாம் முதலமைச்சருக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது.
அப்போதே அமைச்சரவையை மாற்றியிருந்தால் சாதாரணமாக போயிருக்கும். இப்போது பி.டி.ஆரின் ஆடியோ சர்ச்சைக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் நடந்திருப்பதால், விவகாரம் வேறு மாதிரி பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, அந்தச் சர்ச்சையில் சிக்கிய பி.டி.ஆரை மாற்ற வேண்டுமா இல்லையா என்ற கேள்வியை தி.மு.க. அரசு சரியாகக் கையாளவில்லை," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். பிபிசி தமிழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல் காணொளி இங்கே.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்