தோனி தலைமையில் இந்த சீசன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்படி இருக்கும்?

தோனி தலைமையில் இந்த சீசன்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்படி இருக்கும்?
பிரசுரிக்கப்பட்டது

16-ஆவது ஐபிஎல் போட்டித் தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நாளை தொடங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே தற்போதைய சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் உடன் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதவுள்ளது.

வெற்றிகரமான கேப்டன் எனும் பேர் பெற்ற எம்.எஸ்.தோனி இதுவரை 2010, 2011, 2018, 2021 என 4 முறை சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி சென்னைதான்.

அதேநேரம், கடந்த ஆண்டு சி.எஸ்.கேவுக்கு சற்று கடினமான ஆண்டாக அமைந்தது. தோனி கேப்டன்சியில் இருந்து விலகியது, ஜடேஜா தலைமையில் சி.எஸ்.கே தொடர்ந்து சறுக்கியது என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தது சென்னை அணி.

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு ஐபிஎல் தொடர் எப்படி அமையும்? தோனி தலைமையில் 5வது முறையாக கோப்பையை வெல்லுமா சி.எஸ்.கே?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: