உடலில் ஏற்பட்ட காயத்திற்கு தானே மூலிகை வைத்தியம் செய்துகொண்ட ஒராங்குட்டான் குரங்கு - எப்படி?

உடலில் ஏற்பட்ட காயத்திற்கு தானே மூலிகை வைத்தியம் செய்துகொண்ட ஒராங்குட்டான் குரங்கு - எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

இந்த ஒராங்குட்டான் குரங்கின் முகத்தில் பெரிய காயம் இருந்தது. ஆனால், ஒரு மாதம் கழித்து அந்தக் காயம் மறைந்துவிட்டது. அந்த ஒராங்குட்டான் குரங்கே தன்னுடைய காயத்தை ஆற்றிக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குரங்கின் பெயர் ரக்கூஸ். மற்ற ஆண் குரங்குகளுடன் சண்டையிடும்போது பெரும் சத்தத்தை எழுப்பியது. அந்தச் சத்தத்தை வைத்துத்தான் இந்த குரங்குக்குக் காயம் ஏற்பட்டதை விஞ்ஞானிகள் ஊகித்தனர்.

காயத்தை ஆற்றுவதற்காக, இக்குரங்கு மருத்துவ குணம் கொண்ட தாவரத்தின் இலைகளை மென்று, அதை பேஸ்ட் போன்று செய்து பின்னர் காயத்தில் தடவியுள்ளது.

இதனால், அந்தக் காயம் ஒரு மாதத்தில் ஆறியுள்ளது. வனவிலங்கு ஒன்று தன் காயத்திற்கு மருத்துவ தாவரங்கள் மூலம் தானே சிகிச்சை எடுத்துக் கொண்டதை ஆவணப்படுத்தியது இதுவே முதன் முறை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)