பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச சமூகத்தில் இஸ்ரேல் அரசியலின் முகமானது எப்படி?
பெஞ்சமின் நெதன்யாகு.
காஸாவில் ஹமாஸுடம் மோதல், லெபனானில் ஹெஸ்பொலாவுடன் மோதல், இரானுடான சமீபத்திய பதற்ற சூழல் என மத்திய கிழக்கில் பல்வேறு மோதல்களின் பின்னால் உச்சரிக்கப்படும் பெயர். பெஞ்சமின் நெதன்யாகு நீண்ட காலமாக இஸ்ரேலின் பிரதமராக இருந்துவருவதோடு அந்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் சிறிதும் எதிர்பார்க்காத தாக்குதல் ஒன்று அதன் மண்ணில் நடந்தது. ஹமாஸ் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல், இஸ்ரேலியர்களை பணய கைதிகளாக பிடித்துச் சென்றது.
இதற்கு பிறகு பெஞ்சமின் நெதன்யாகுவின் செல்வாக்கு ஆட்டம் கண்டது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதால் அவர் புகழ் மீண்டும் உயர்ந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகமான சேனல் 12-ன் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
சர்வதேச சமூகத்தில் இஸ்ரேல் அரசியலின் முகமாக அறியப்படுபடும் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் தேசியவாத வலுதுசாரி அடையாளத்திற்கான அடித்தளமாக திகழ்பவர்.
மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிரான சக்திகளிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் ஒரு நபராக நெதன்யாகு தன்னை அடையாளப்படுத்தி கொண்ட காரணத்தால் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.
மேலும் தகவல்கள் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



