காங்கிரஸ் கட்சியில் இணைந்த வினேஷ் போகாத், பஜ்ரங் புனியா கூறியது என்ன?

காங்கிரஸ் கட்சியில் இணைந்த வினேஷ் போகாத், பஜ்ரங் புனியா கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மல்யுத்த வீரர்களான வினேஷ் போகாத், பஜ்ரங் புனியா ஆகியோர் செப்டம்பர் 6-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பின்னர் பேசிய வினேஷ் போகாத், ‘நாங்கள் சாலைகளில் இழுக்கப்பட்டபோது, பா.ஜ.க-வைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் இருந்தன' என்றும் தங்களின் வலியையும் கண்ணீரையும் காங்கிரஸ் புரிந்துகொண்டது என்றும் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இணைவதற்காக இருவரும் ரயில்வேயில் வகித்த பதவியையும் ராஜினாமா செய்தனர். வினேஷ் போகாத்தும் பஜ்ரங் புனியாவும் கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருந்தனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் இருவரும் காங்கிரஸில் இணைந்தனர்.

அப்போது பேசிய கே.சி.வேணுகோபால், வினேஷ் போகாத் தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்த பின்னர், வாட்ஸ்ஆப் மூலம் ரயில்வே அவருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக குறிப்பிட்டார்.

வினேஷ் போகாத்தும், பஜ்ரங் புனியாவும் ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது தொடர்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திப்பது எப்போது குற்றமாக மாறியது எனக் கேள்வி எழுப்பினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)