You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வெற்றிக்கு பிறகு டிரம்ப் பற்றி மம்தானி பேசியது என்ன?
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மேயர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நபரான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். அதிபர் டிரம்புக்கு இவருக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்குப் பிந்தைய உரையில் டிரம்புக்கு பதிலளிக்குமாறு பேசினார் மம்தானி. அப்போது, "அதிபர் டிரம்ப் அவர்களே.. நான் சொல்வதைக் கேளுங்கள். எங்களில் யாரையேனும் தொட வேண்டுமென்றால், எங்கள் அனைவரையும் தாண்டித்தான் செல்லவேண்டும்.நியூயார்க் நகரம் குடிபெயர்ந்தவர்களால் கட்டமைக்கப்பட்ட, குடிபெயர்ந்தவர்களால் இயக்கப்படும், குடிபெயர்ந்தவர்களின் நகரமாகவே இருக்கும்."
"இன்று இரவு முதல் குடிபெயர்ந்த ஒருவரால் வழிநடத்தப்படவுள்ளது. அதனால் அதிபர் டிரம்ப் அவர்களே.. நான் சொல்வதை கேளுங்கள். எங்களில் யாரையேனும் தொட வேண்டுமென்றால், எங்கள் அனைவரையும் தாண்டித்தான் செல்ல வேண்டும்." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு