காணொளி: அரசு பணி உத்தரவு ரத்து – கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பம் சொல்வது என்ன?

காணொளி: அரசு பணி உத்தரவு ரத்து – கரூர் நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பம் சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

கரூரில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யின் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டோர் குடும்பங்களில் இருந்து, 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டது. அதற்கான பணியாணையை கடந்த பத்தாம் தேதி தமிழக முதல்வர் விஜய் கரூரில் நடந்த நிகழ்வில் வழங்கினார்.

பணியாணை வழங்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பணியாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் ஒருவரான ரவி கிருஷ்ணா என்பவரின் தங்கைக்கு பணி வழங்கப்பட்ட நிலையில், அவரது தாயார் ஞானாம்பாள் பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது நீதிமன்றம் கருணையுடன் பரிசீலனை செய்து மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு