காணொளி: 14 அடி நீள ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பாம்பு பிடி நிபுணர்கள்

காணொளிக் குறிப்பு, ராஜநாகம்
காணொளி: 14 அடி நீள ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பாம்பு பிடி நிபுணர்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலைப் பொழுதை உத்தராகண்ட் மாநிலத்தின் டேராடூனின் பௌவாலா (Bhauwala) பகுதியில் உள்ள பத்வாலா (Badowala) கிராம மக்கள் ஒருபோதும் மறக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் ஒரு ராஜநாகம் செடிக்கொடிகளில் மறைந்திருந்தது. சிறிது நேரத்திலேயே இந்த மிகப்பெரிய பாம்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

''வன காவலர் அழைத்து, இப்படியொரு பெரிய பாம்பை வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்றார். உள்ளூர் மீட்பாளரால் கூட மீட்க முடியவில்லை. அப்போதுதான் அர்ஷத்தை அழைத்தேன். இருவரும் அந்த பகுதியை அடைந்தோம். '' என்கிறார் வனத்துறை மீட்பு குழுவை சேர்ந்த பிரவேஷ் குமார்.

ராஜ நாகம் உலகின் மிகவும் நீளமான மற்றும் மிகவும் விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாகும்.

மேலும் தகவல்கள் காணொளியில்