சென்னையில் மின்சாரம் தாக்கிய சிறுவனை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய இளைஞர்
சென்னையில் மின்சாரம் தாக்கிய சிறுவனை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது
இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள காட்சிகள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்
சென்னை அரும்பாக்கம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியிருந்தது. மழை நீர் தேங்கியிருந்த இடத்தில் நடந்து சென்ற மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டார்.
16-ஆம் தேதி அன்று தெரு ஒன்றில் நடந்து சென்ற மாணவன் ஒருவனை மின்சாரம் தாக்கியது. அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அந்த மாணவனை காப்பாற்றியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



