மகாராஷ்டிர மாநிலம் தானேவில் சுகாதார சேவை புரியும் திருநர்கள்

காணொளிக் குறிப்பு, மகாராஷ்ட்ராவில் திருநங்கைகள் சுகாதாரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் சுகாதார சேவை புரியும் திருநர்கள்
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்டிரா மாநிலம் தானேவை மையமாக கொண்டு ZMQ என்ற தொண்டு நிறுவனம் திருநர் சமூகத்தினரை வைத்து அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர்.

குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் வழங்கச் சென்ற திருநங்கைகள் தற்போது அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குகின்றனர். கர்ப்பமான பெண்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் அவர்கள் வழங்குகின்றனர். சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.

சமூகத்தில் பல்வேறு இன்னல்களையும் அவமானங்களையும் சந்தித்து வரும் திருநர் சமூகத்தினருக்கு மரியாதையை வழங்கும் ஒரு இயக்கமாக இது அம்மக்கள் மத்தியில் கருதப்படுகிறது.

மும்ப்ரா கௌசா என்ற பகுதியில் திருநர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன? எது எதிர்கால சந்ததியினருக்கு எத்தகைய சுகாதார பாதுகாப்பை வழங்கும்? விவரிக்கிறது இந்த காணொளி.

செய்தி & ஒளிப்பதிவு - ஷாகித் ஷேக்

எடிட் - அரவிந்த் பரேகர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)