திடீரென கவிழ்ந்த லாரி - நூலிழையில் உயிர் பிழைத்த அரசு அதிகாரிகள்
திடீரென கவிழ்ந்த லாரி - நூலிழையில் உயிர் பிழைத்த அரசு அதிகாரிகள்
பிரசுரிக்கப்பட்டது
மகாராஷ்டிராவில் பீட் மாவட்டத்தில் உள்ள காட்கி பகுதியில் சாலை புனரமைப்புப் பணிகளால் விபத்துகள் அதிகம் நடப்பதாகக் கூறிய மக்கள் மாற்று வழி ஏற்பாடு செய்து தருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
நேரில் வந்து பார்த்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய அதிகாரிகள் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டபோது லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கவிழ்ந்ததில் அதிகாரிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



