பஞ்சாபில் வீட்டின் மீது விழுந்த டிரோன் பாகங்கள் - என்ன நடந்தது?

பஞ்சாபில் வீட்டின் மீது விழுந்த டிரோன் பாகங்கள் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

டிரோன் ஒன்றின் உடைந்த பாகங்கள் இந்தியாவிலுள்ள பஞ்சாபின் பெரோஸ்பூரில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்ததில் 3 பேர் காயம் என காவல்துறை கூறியுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பெரோஸ்பூர் மூத்த காவல் கண்காணிப்பாளர் பூபிந்தர் சிங் கூறுகையில், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த டிரோனின் ஒரு உடைந்த பகுதி கய் பேமே கே கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்து அவ்வீடு தீப்பற்றி எரிந்ததாக தெரிவித்தார். டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து பாகிஸ்தான் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

காயமடைந்த லக்விந்தர் சிங், அவரது மனைவி மற்றும் சகோதரர் மோனு சிங் ஆகிய மூவர் தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாகவும் லக்விந்தர் சிங் கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளதாக பிடிஐ கூறுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு