You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதானி குழுமம்: மொரிஷியஸ் வழியே முறைகேடாக பணம் முதலீடா?
இந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற பங்குகளை விற்று வாங்கும் நிறுவனம், அதானி குழுமம் பங்குகளின் விலைகளை அதிகரித்துக் காட்டியதாக ஒரு ஆய்வறிக்கையில் குற்றம் சாட்டியபோது, அதன் உரிமையாளர் கௌதம் அதானி உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்தார்.
ஆனால் இந்த அறிக்கை வந்தபின், அவரது சொத்து மதிப்பு 120 பில்லியன் டாலரில் இருந்து 39.9 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது.
அதாவது, ஒரே இரவில் அவரது சொத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது. அதானி குழுமம், அதன் நிறுவனங்களின் பங்கு விலைகளை மிகவும் அதிகரித்துக் காட்டியதாகவும், வரிவிலக்கு சூழல் நிலவும் நாடுகள் மூலம் மோசடி செய்வதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குற்றம் சாட்டியிருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்