You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்ய ராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள் - என்ன காரணம்?
நேபாளத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் படித்துவிட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான், யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் இறந்தனர். அதன் விளைவாக ரஷ்ய ராணுவத்துக்கு நிறைய படை வீரர்கள் தேவைப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, வெளிநாட்டவரும் ரஷ்ய ராணுவத்தில் சேர வகைச் செய்யும் விதத்தில், குறிப்பிட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். ரஷ்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதிக ஊதியம், ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவது என ரஷ்ய ராணுவத்தில் சேர விரும்பும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்