ஆந்திரா ரயில் விபத்து எப்படி நடந்தது? உண்மை என்ன?
ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) மாலை 7 மணியளவில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா கிராமங்களுக்கு இடையே பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற பிபிசி தெலுங்கு சேவையில் செய்தியாளர் ஸ்ரீனிவாஸ் லக்கோஜு தாம் களத்தில் நேரில் கண்டதைத் தொகுத்தளிக்கிறார்.
இந்த விபத்தில் 8 பேர் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் நானே அங்கு 11 சடலங்களை பார்த்தேன். நசுங்கிய பெட்டிகளில் ஒருவர் காணப்படுவதாகவும், அந்த நபரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் நிவாரணப் பணியாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
13 பேர் உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

















