ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கக் கோரும் பெற்றோர்கள்

ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கக் கோரும் பெற்றோர்கள்
பிரசுரிக்கப்பட்டது

சமீபத்தில் இந்திய இளைஞர்கள் பலரும் ரஷ்யா - யுக்ரேன் போர்முனையில் சிக்கிக்கொண்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட இந்திய இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளனர். தெலுங்கானாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் போர்முனையில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

இவரை போலவே பல இந்திய இளைஞர்களும் ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக ஏமாற்றி சேர்க்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணியில் இந்திய வெளியுறவுத்துறை ஈடுபட்டுள்ளது.

அப்படி சமீபத்தில் சில இளைஞர்கள் ரஷ்யாவில் சிக்கி உள்ளதாக பேசும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த இளைஞர்களில் 5 பேர் பஞ்சாப் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

அவர்களது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், அவர்கள் எப்படி ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர் என்பது குறித்து பிபிசியிடம் பேசியுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)