You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிடிஆர் ஆடியோ டேப் விவகாரத்தில் முதன்முறையாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன சொன்னார்?
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவின் முதல் பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, அதனால் எழுந்த அதிர்வுகள் அடங்கும் முன்பே ஏப்ரல் 25ஆம் தேதி பிடிஆர் பேசியதாகக் கூறி இரண்டாவது ஆடியோவை வெளியிட்டார். இரண்டு ஆடியோ பதிவில் பேசப்பட்டிருந்த விஷயங்களும் தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளானது.
இந்த ஆடியோ பதிவுகள் போலியானது என நிதியமைச்சர் மறுப்பு தெரிவித்தாலும் அதையொட்டி எழுந்த சர்ச்சை எழுந்த ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில்தான், 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் 11.15 நிமிட வீடியோ இன்று வெளியானது. அதில், ஆடியோ லீக் சர்ச்சை குறித்த கேள்விக்குப் பதிலளித்திருந்த அவர், "இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏற்கனவே 2 முறை விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. மட்டமான அரசியல் செய்யும் நபர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்