You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹமாஸ் விடுவித்த 9 வயது இஸ்ரேலிய சிறுமி தனது தந்தையுடன் சேர்ந்த நெகிழ்ச்சி காட்சி
ஹமாஸ் விடுவித்த 9 வயது இஸ்ரேலிய சிறுமி தனது தந்தையுடன் சேர்ந்த நெகிழ்ச்சி காட்சி
பிரசுரிக்கப்பட்டது
அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி, இஸ்ரேல் மக்கள் 200க்கும் மேற்பட்டோரை பயணக்கைதிகளாகக் கடத்திச் சென்றனர்.
அப்போது, பேர்ரியில் உள்ள தோழி ஹிலா வீட்டில் இருந்து எமிலி கடத்தப்பட்டார். எமிலியின் சித்தி நர்கிஸ் ஹமாஸால் கொல்லப்பட்டார்.
ஹமாஸிடம் பணயக்கைதியாக இருந்தபோது 9 வயதை அவர் எட்டினார். தற்போது, எமிலி ஹேண்ட் இப்போது வீடு திரும்பிவிட்டார். தனது தந்தை தாமஸின் கரங்களில் பாதுகாப்பாக உள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)