வேளாண் கழிவுகளால் உருவான டைல்ஸ்: காற்று மாசைக் குறைக்க புது முயற்சி – காணொளி

காணொளிக் குறிப்பு, வேளாண் கழிவுகளால் உருவான டைல்ஸ், காற்று மாசைக் குறைக்கப் புது முயற்சி – காணொளி
வேளாண் கழிவுகளால் உருவான டைல்ஸ்: காற்று மாசைக் குறைக்க புது முயற்சி – காணொளி
பிரசுரிக்கப்பட்டது

கட்டடங்களுக்கு சீலிங் பதிக்கும் தொழிலில் மட்டும் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடக்கிறது. வெப்பத்தை தாங்குவதற்கு இது ஏற்றது.

வட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடைக்கு பின்னர், வேளாண் கழிவுகளை அகற்றுவதில் பெரியளவில் பிரச்னை நிலவுகிறது.

அதிகப்படியான வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காற்று மாசு ஏற்படுகிறது.

இவற்றை கட்டுப்படுத்த ஒரு பக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில், வைக்கோலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவும் புதுப்புது முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பஞ்சாபின் குர்தாஸ்புர் பகுதியைச் சேர்ந்த பர்மிந்தர் சிங் வைக்கோலை பயன்படுத்தி டைல்ஸ் உருவாக்கி வருகிறார்.

பஞ்சாப், வேளாண் கழிவுகள், காற்று மாசு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)