You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரள கடல் பகுதியில் தொடர்ந்து எரியும் சரக்குக் கப்பல் - என்ன நடக்கிறது?
மும்பையில் இருந்து கொழும்புவுக்கு சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் ஒன்று கேரளாவின் கடற்கரை அருகே வந்துகொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது.
ஜூன் 9-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் இந்திய கடற்படையால் 18 பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 4 பணியாளர்களை தேடும் பணி நடந்துவருகிறது. தீயை அணைக்கும் பணியில் இந்திய கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வெடிப்புச்சம்பவங்கள் கப்பலில் நடப்பதால் தீ தொடர்ந்து எரிவதாக கடலோர காவல்படை கூறுகிறது. சிங்கப்பூர் கொடியுடன் கூடிய இந்த கப்பலில் இருந்த கண்டெயினரில் ஏற்பட்ட வெடிப்பால் பெரிய அளவில் தீப்பற்றி எரிந்தது. கப்பலில் இருந்து 50 கண்டெயினர்கள் கடலில் விழுந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு