குடல் புழுக்கள் உடலுக்குள் நுழையாமல் தடுப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, குடற்புழுக்கள் உடலில் நுழையாமல் தடுப்பது எப்படி?
குடல் புழுக்கள் உடலுக்குள் நுழையாமல் தடுப்பது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

சுகாதாரமின்மை காரணமாக குடற்புழுக்கள் நமது உடலில் நுழைகின்றன. கைகளை சரியாக கழுவாததால், மோசமான கழிவுநீர் மேலாண்மை, சுகாதாரமற்ற கழிவறைகள் காரணமாக குடற்புழுக்கள் உடலில் நுழையக் கூடும்.

நீளமான கயிறு போல தோற்றமளிக்கும் புழுக்களின் முட்டைகள் வயிற்றுக்குள் நுழையும் போது பிரச்னை ஆரம்பமாகிறது. வயிற்றை அடையும் போது, அந்த முட்டைகள் லார்வாக்களாக மாறி பின் ஓரிரு மாதங்களில் புழுக்களாக மாறும்.

வட்டப்புழுக்கள், தட்டை புழுக்கள், நாடா புழுக்கள் என பல்வேறு வகைப்படும் இந்த புழுக்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை இருக்கும். குழந்தைகளில் நூற்புழுக்கள் காணப்படும்.

அடிக்கடி கை கழுவுதல், சாப்பிடும் முன், கழிவறைக்கு சென்ற பின் கை கழுவுதல், குழந்தைகளின் நாப்கினை மாற்றிய பிறகு கை கழுவுதல் மூலம் குடற்புழுக்களை தவிர்க்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)