You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அலக்ஸே நவால்னி இறப்புக்கு காரணம் விளாதிமிர் புதின் - அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டு
ரஷ்யாவில் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸெ நவால்னியின் மரணம் சர்ச்சையாகியிருக்கிறது.
தீவிரவாத அமைப்பை நிறுவி நிதியுதவி செய்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறைத்தண்டனை பெற்றிருந்த அவர், ஆர்க்டிக் வட்டார சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
நவால்னி மரணத்திற்கு ரஷ்ய அதிபர் புதினே காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். நவால்னிக்கு நடந்தது புதினின் மிருகத்தனத்திற்கு கூடுதல் சாட்சி என்று விமர்சித்துள்ள பைடன், அனைவருக்குமான சட்டத்தின் ஆட்சியை ரஷ்யாவில் கட்டியெழுப்ப நவால்னி அர்ப்பணிப்புடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)