மெஷின் ஆன் பண்ணா போதும் - 1 மணி நேரத்தில் 1000 சப்பாத்தி ரெடி - காணொளி

காணொளிக் குறிப்பு, மெஷின் ஆன் பண்ணா போதும் - 1 மணி நேரத்தில் 1000 சப்பாத்தி ரெடி
மெஷின் ஆன் பண்ணா போதும் - 1 மணி நேரத்தில் 1000 சப்பாத்தி ரெடி - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தை சேர்ந்த உமேஷ் திரபதியா உருவாக்கி இருக்கும் இயந்திரம் சமையலை எளிமையாக்கி இருக்கிறது.

இனி திருமணம், பெரிய நிகழ்ச்சிகள், கல்லூரி கேண்டின் என எங்கு வேண்டுமானாலும் எளிதாக சமைக்க முடியும்.

உமேஷ் உருவாக்கி இருக்கும் இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்தில் 1000 சப்பாத்திகளை சமைத்து தருகிறது.

மின்சாரம், கேஸ் என இரண்டையும் பயன்படுத்தி இயங்கும் இந்த இயந்த்திரத்தால் ஒரே அளவில், ஒரே பதத்தில் அனைத்து சப்பாத்திகளையும் சுட்டுத் தர முடியும்.

மெஷின் உதவியுடன் 1000 சப்பாத்தியையும் தயார் செய்ய ஒரு நபர் இருந்தாலே போதுமானது. சப்பாத்தி மாவை உருண்டை பிடித்து இந்த மெஷினுக்குள் அனுப்பினால் தட்டையாக தேய்த்து சுடச்சுட சப்பாத்தியாக சுட்டுத் தருகிறது.

இந்த இயந்திரத்தின் விலை அளவை பொறுத்து, 68 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

சப்பாத்தி

பட மூலாதாரம், Bipin Tankaria / Ravi Parmar

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: