You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கால்களோடு துண்டிக்கப்பட்ட கனவு: விடுதலைப் புலிகளுடன் கால்பந்து ஆடிய இவர் யார்? - காணொளி
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளுடன் கால்பந்து விளையாடிய இவர், இன்று தனது காலை இழந்து மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்.
90ம் ஆண்டு காலப் பகுதியில் திடீரென தனது காலில் ஏற்பட்ட காயமொன்றினால், தனது ஒரு காலை அகற்றுவதற்கு வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மைத்திரிபாலன் தெரிவிக்கின்றார்.
''93ல் இந்த காலை எடுக்க வேண்டிய நிலைமை வந்தது. இந்த காலை எடுத்து, 6 மாதங்கள் சென்றவுடன், மற்ற காலிற்கும் வருத்தம் வந்தது. மூன்று வருடங்கள் வரை இந்த இரண்டு கால்களுக்கும் அவதிப்பட்டேன். காலை சுகப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வந்த போது, வாழ்வாதாரத்திற்கு வழி இல்லை. சொந்தகாரர்களின் வீடுகளுக்கு போய் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். பிள்ளைகள் திருமணம் செய்துக்கொண்டார்கள். இந்த தொழிலை எமது ஐயா ஆட்கள் செய்தார்கள். நான் இந்த வேலையை பழகிக் கொண்டேன்" என அவர் கூறுகின்றார்.
கால்களை இழந்து கால்பந்து விளையாட முடியாமல் போனாலும் அவ்விளையாட்டு மீதான அவரின் காதல் குறையவில்லை. தற்போதும் கால்பந்து விளையாட்டை விரும்பி பார்ப்பதாகவும் தனக்கு பிடித்த வீரர் மெஸ்ஸி என்றும் சக்திவேல் மைத்திரி பாலன் கூறுகிறார். (முழு தகவல் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்