You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெல் பயிர்களை அழித்த என்.எல்.சி நிறுவனம் - விவசாயிகள் வேதனை
விருதாச்சலத்தில் இருந்து சேத்தியோதோப்பு வழியாக கத்தாழை கிராமத்திற்குச் சென்றோம். மதிய நேர உச்சி வெயில் ஏற்படுத்திய களைப்புக்கு நடுவே, நெற்பயிர்களின் முற்றிய கதிர்களுடைய பால் வாசம் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், அந்தப் பால் வாசம் வீசிய நெற்பயிர்களுக்கு நடுவே, நிலத்தை அழித்து வேலை செய்துகொண்டிருந்த இயந்திரங்களின் சத்தமும் அதிகமாகவே கேட்டது.
கிராமத்தின் முகப்புப் பகுதியிலேயே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஊருக்குள்ளே செல்பவர்கள், வெளியே வருபவர்களை போலீசார் விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அங்கு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேளாண் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்