You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை- பேக்கோ லோடர் இயக்கி அசத்தும் கோவை பெண்
ஒரு காலத்தில் சைக்கிள் ஓட்டவே அஞ்சி ஓடிய பெண், இன்று பேக்கோ லோடர் என்ற ராட்சத ஜேசிபி வாகனத்தையே அனாயசமாக இயக்கி மிரளவைக்கிறார்.
பேக்கோ லோடரைப் பொறுத்தவரை அதன் உருவத்தைப் போன்றே ஆபத்தும் பெரியது. சற்று பிசகினாலும், வண்டியை இயக்குபவருக்கோ, அல்லது அருகில் இருப்போருக்கோ பேராபத்தை ஏற்படுத்தி விடும்.
ஆனால், அதையே தன் கையசைவுக்கு கட்டுப்படும் குழந்தையாக மாற்றிவிடுகிறார் கோவையைச் சேர்ந்த அங்காள ஈஸ்வரி.
கால்டாக்ஸி ஓட்டுநராக இருந்து பேக்கோ லோடர் ஆபரேட்டராக முன்னேறிய இவர், தன்னைப் போன்றே பல பெண்களும் தைரியமாக தங்கள் தொழிலில் முன்னேறி கேலி பேசிவோரின் வாய்களுக்கு பெரிய பூட்டொன்று பூட்டிட வேண்டும் என்கிறார். ( முழு தகவல் காணொளியில்)
காணொளி தயாரிப்பு: கலைவாணி
படத் தொகுப்பு: நிஷாந்த்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்