உங்கள் வாகனத்திற்கு போலீஸ் அபராதம் விதிக்காமல் இருக்க வேண்டுமா? - இதை மறக்காம செக் பண்ணுங்க!

சென்னையில் அரசு விதிமுறைகளை மீறி முறையற்ற வாகன பதிவெண்களை கொண்ட வாகனங்களின் மீது போக்குவரத்து காவல் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 4,132 முறையற்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாகன பதிவெண் பலகையில் வண்டியின் எண்களை தவிர வேறு வாசகம், படங்கள் ஒட்டியிருக்கும் வாகனங்களை காவல்துறையினர் கண்டறிந்து அபராதம் விதித்தனர்.
சென்னையில் தீவிர வாகன சோதனை
சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையினர் கடந்த சில வாரங்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் போது இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பதிவெண் பலகை முறையற்ற முறையில் இருப்பது கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை கடந்த 3 வாரங்களில் 43, வாகனங்களின் பலகைகள் சரி செய்யப்பட்டுள்ளன.
சாலையில் வாகன சோதனையில் ஈடுபடுவது மட்டுமின்றி, பொது இடங்களில் நிறுத்தி(பார்க்கிங்) வைக்கப்பட்டு இருக்கும் வாகனங்களையும் கண்டறிந்து அதில் விதிமுறை மீறிய வண்டிகளில் அபராதத்திற்கான ரசீதையும் ஒட்டிச் சென்றனர்.
சென்னை முழுவதும் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நடந்த சோதனையில் விதிமுறை மீறப்பட்ட நம்பர் பிளேட் இருக்கும் வாகனங்களுக்கு முதல் முறை 500 ரூபாய் அபராதமாகமும் அடுத்த முறை 1500 ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்படுகிறது.
ஆன்லைன் புகார்

ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாக ஆன்லைனிலும் புகார் பெறப்பட்டு, விதிமுறைகளை மீறும் வண்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதை பார்த்த பலரும் சாலைகளில் விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருக்கும் வாகனங்களை படமெடுத்து பதிவிடுகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
சமூக ஊடகங்களில் நேரம், இடம், தேதியுடன் பதிவிடப்படும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் தெரிவித்தார்.
"கடந்த 2 மாதங்களில் டிவிட்டர் மூலம் 1,267 விதிமீறல்கள் போக்குவரத்து காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அதில் 90.5 சதவீத புகார்கள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.
காவல்துறையினருடன் வாக்குவாதம்

சென்னையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினருடன் ஒரு சில இடங்களில் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் வாகன சோதனையின் போது 'தமிழ்நாடு 04 AT 9694 ' என எழுதியிருந்த ஒரு வாகனத்தை நிறுத்தி அபராதம் விதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த நபர், "தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்நாடு என்று பதிவிடக் கூடாதா" எனக் கூறி போக்குவரத்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதே போல வாகன பதிவெண் பலகையில் 'ஊடகம், போலீஸ்' என பல்வேறு வாசகங்களை எழுதியிருந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சரியான நம்பர் பிளேட் எது?

பட மூலாதாரம், Twitter/ChennaiTraffic
வாகனங்களில் பொருத்தியிருக்கும் நம்பர் பிளேட் எப்படி இருக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறையிடம் பிபிசி கேட்ட போது பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
- இரு சக்கர மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்களுக்கு வெள்ளை நிற பலகையில் கருப்பு நிறத்தில் பதிவெண் எழுதி இருக்க வேண்டும்
- வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கார்கள் மற்றும் கனரக வாகனங்களில் மஞ்சள் நிற பலகையில் கருப்பு நிறத்தில் பதிவெண் எழுதியிருக்க வேண்டும்
- பதிவெண் பலகை வண்டியின் முன்னும் பின்னும் பொருத்தியிருக்க வேண்டும்
- புரியும்படி தெளிவான எழுத்துகளில் எழுதியிருக்க வேண்டும். மற்ற படம், பெயர் இடம் பெறக்கூடாது
- இருசக்கர, இலகு ரக நான்கு சக்கர வாகனத்தின் முன்பக்கம் ஒரே வரிசையிலும், பின்பக்கம் இரண்டு வரிசையாகவும் பதிவெண் எழுதி இருக்க வேண்டும்.
- உதாரணமாக முன்பக்கத்தில் 'TN 01 X 0XX0' எனவும்
பின்பக்கத்தில்
'TN 01
X 0XX0'
எனவும் எழுதி இருக்க வேண்டும்.
- இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் பதிவெண் பலகை 200 x 100 மில்லி மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும்
- இதில் பின்பக்க எழுத்தின் உயரம் 35 மில்லி மீட்டராகவும், தடிமன் 7 மில்லி மீட்டராகவும், இரண்டு எழுத்துக்கு இடையே 5 மில்லி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
- அதே போல பின்பக்க பலகையில் வரும் எண்களின் உயரம், தடிமன், இடைவெளி முறையே 40 x 7 x 5 என்ற அளவில் இருக்க வேண்டும்
- முன்பக்க பலகையில் வரும் எண்களும், எழுத்துக்களும் 30 x 5 x 5 என்ற அளவில் அதன் உயரம், தடிமன், இடைவெளி இருக்க வேண்டும்
- இதே போல ஒவ்வொரு வாகனங்களுக்கு அதன் திறனுக்கேற்ப வெவ்வேறு அளவில் பதிவெண் பலகைக்கான அளவுகள் உள்ளன. அதனை பின்பற்றி பலகைகளை பொருத்த வேண்டும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












