பாகிஸ்தான் ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறது- இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறது- இந்தியா குற்றச்சாட்டு
பிரசுரிக்கப்பட்டது

இந்தியா பாகிஸ்தான் எல்லை பதற்றம் தொடர்பான இன்றைய (09/05/2025 ) செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அதில் பாகிஸ்தான் தன் மீதான தவறுகளை மறைக்க ஏமாற்று வேளைகளில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் தனது தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்க மறுப்பதாக கூறும் அவர் அதற்கு மாறாக இந்தியாவே தனது எல்லையோரப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது போன்ற அபத்தமான கருத்துக்களை பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசியவர், "அதே போல, மதம்சார்ந்த இடங்களை தாக்கவோ இலக்கு வைக்கவோ இல்லை என பாகிஸ்தான் கூறியது. நேற்று பூஞ்ச் பகுதியில் உள்ள குருத்வாராவில் நடந்த தாக்குதல் பற்றி கூறியிருந்தேன். இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்பதற்கு பதில், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைதான் அமிர்தசரஸ் போன்ற நகரங்களை தாக்கி விட்டு பழியை தங்கள் மீது போடுகிறது என அபத்தமான, மோசமான கூற்றை பாகிஸ்தான் தெரிவித்தது" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு