அரவிந்த் கேஜ்ரிவால் விவகாரம்: அமெரிக்கா கருத்தால் கடுப்பான இந்தியா - என்ன நடந்தது?
அரவிந்த் கேஜ்ரிவால் விவகாரம்: அமெரிக்கா கருத்தால் கடுப்பான இந்தியா - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது.
முதலில் ஜெர்மனி தற்போது அமெரிக்கா என உலக நாடுகள் அவரது கைது குறித்து தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றன.
இந்தியா, இந்த இரு நாடுகளின் அதிகாரிகளையும் வரவழைத்து, இது உள்நாட்டு விவகாரம் என்று கூறி அவர்கள் கருத்து தெரிவித்ததை கண்டித்துள்ளது.
தங்களது தூதரக அதிகாரியை அழைத்துக் கண்டித்தது குறித்தும் அமெரிக்கா தற்போது கருத்து தெரிவித்துள்ளது. "நியாயமான, நேர்மையான, வெளிப்படையான நீதி விசாரணையை அமெரிக்கா ஆதரிப்பதாகவும், அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது" என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



