You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவல் நிலையத்திற்கு உள்ளேயே காரை விட்ட நபர் - என்ன செய்தார் தெரியுமா?
செப்டம்பர் 20ஆம் தேதி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடந்த சம்பவம் இது. ஜான் ஹார்க்ரீவ்ஸ் என்ற 34 வயதான நபர், காரில் பாடலை சத்தமாக ஒலிக்கவிட்டு, தாறுமாறாக ஓட்டிச் சென்றது மட்டுமின்றி காவல் நிலையத்திற்கு உள்ளேயே காரை மோதச் செய்திருக்கிறார்.
இந்த விபத்தில் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார். யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
காரில் இருந்து ஜான் ஹார்கிரீவ்ஸ், இறங்கியதும் உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, அதே நாளில் தனியார் குடியிருப்புக்கு உள்ளேயும் காரை மோதச் செய்த விவகாரம் தொடர்பாக ஜான் ஹார்கிரீவ்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)