கனடாவில் காட்டுத் தீ - பல ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

காணொளிக் குறிப்பு, கனடாவில் காட்டுத் தீ - பல ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
கனடாவில் காட்டுத் தீ - பல ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
பிரசுரிக்கப்பட்டது

கனடாவின் மேற்கு மாகாணம் காட்டுத் தீயால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 800 ஹெக்டர் பரப்பளவு வரை காட்டுத் தீ பரவியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக பாதிப்புக்குள்ளான பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு அவசர நிலை பிரகனடம் செய்யப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் தீயால் பல வீடுகள் தீக்கிரையாகின. கனடாவின் வடமேற்கு பகுதியில் 22 ஆயிரம் பேர், ஆதாவது அப்பகுதியின் மக்கள் தொகையில் பாதி பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சாலை வழியாகவும், வான் வழியாகவும் மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு விரைந்துள்ளனர். இதனால் அதிக கூட்ட நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

அவசரகால மேலாண்மை அமைச்சர் பொவின் மா கூறுகையில், ஒரு மணி நேரத்திலேயே ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் வரை பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

கனடாவில் காட்டுத் தீ

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: