You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காலநிலை நெருக்கடி: அரசியல் கட்சிகளிடம் எண்ணூர் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?
இன்னும் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னையின் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் காலநிலை நெருக்கடி குறித்தும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் தாங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்தும் தங்களது கருத்துக்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டனர்.
“காலநிலை மாற்றத்தால் எண்ணூர் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள ஆலைகளால் கடலும் ஆறும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை விட மொத்தமாக தேர்தலை புறக்கணிக்கும் மனநிலையில் தான் நாங்கள் இருக்கிறோம்” என்கிறார் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷினி.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளையும், புகார்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
முழு விவரம் காணொளியில்.
தயாரிப்பு: க. சுபகுணம்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு: நிஷாந்த்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)