You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம். நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும்.
பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் இந்த வாரம், 'அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன?, மத்திய பட்ஜெட்: யாருக்கு சுகம்? யாருக்கு சுமை? விரிவான ஆய்வு, கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலை எந்த அளவுக்குப் பாதிக்கும்?, ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்புக்கு '2024' தேர்தல் காரணமா?, U19 உலக சாம்பியன்: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் '83' தருணம் என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
அதானி Vs ஹிண்டன்பர்க்: நடப்பது என்ன? எளிய விளக்கம் - எல்ஐசி, எஸ்பிஐ-யில் மக்கள் பணத்திற்கு ஆபத்தா?
உலக பணக்காரர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்த இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானிக்கு இது சிக்கலான நேரம். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை, அதானி குழுமத்தையே அசைத்திருக்கிறது.
அடுத்தடுத்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியது. விரிவாக படிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.
மத்திய பட்ஜெட்: யாருக்கு சுகம்? யாருக்கு சுமை? விரிவான ஆய்வு
இந்திய அரசின் நிதி நிலை அறிக்கை புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவருகின்றன. இந்த நிதி நிலை அறிக்கையின் சாதக பாதக அம்சங்கள் என்ன? ஒரு விரிவான கட்டுரை. முழு விவரத்திற்கு லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலை எந்த அளவுக்குப் பாதிக்கும்?
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது எந்த அளவுக்கு சுற்றுச்சூழலை பாதிக்கும்? விவரம் அறிய லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்புக்கு '2024' தேர்தல் காரணமா? கிறிஸ்தவ மக்களின் நிலை என்ன?
இலங்கையில் மிகப் பெரிய பயங்கரவாதத் தாக்குதலான ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டு, நான்கு வருடங்களை அண்மித்துள்ள இந்த சூழ்நிலையில், அப்போது ஜனாதிபதியாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதல் முறையாக இன்று பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்.
U19 உலக சாம்பியன்: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் '83' தருணம்
ஒருவேளை இது இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு 1983 போன்ற தருணமாக இருக்கலாம். கபில்தேவ் தலைமையில் இந்திய ஆடவர் அணி அந்த ஆண்டு உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு இந்திய கிரிக்கெட்டின் முகமே ஒட்டுமொத்தமாக மாறிப் போனது. அதேப்போல் இதுவும் மகளிர் கிரிக்கெட்டின் திருப்புமுனையா?
ஆம். அந்த நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு ஜனவரி 29ம் தேதி சிறப்பானதாக அமைந்தது. சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனையுடன் தனது பெயரையும் இணைத்துக் கொண்ட ஷெஃபாலி வர்மா, தனது அணியை உலக சாம்பியனாக்கினார். முழுமையாக படிக்க லிங்கை க்ளிக் செய்யவும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்