டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி: உள்ளே எப்படி இருக்கும்?
டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற டைட்டன் நீர்மூழ்கி: உள்ளே எப்படி இருக்கும்?
பிரசுரிக்கப்பட்டது
ஐந்து பேர் பயணித்து மரணமடைந்துவிட்ட 'டைட்டன் நீர்மூழ்கி' அதன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, கப்பலின் துணைக் குழுவினரால் பயண ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
ஆழ்கடலுக்குள் நீர்மூழ்கி இறங்குவதற்கு முன்னால், துணைக்குழுவினர் அதை வெளியிலிருந்து பூட்டி, பிறகு போல்ட் மூலம் சீல் செய்தனர்.

பின் ஆழ்கடலுக்குள் இறங்கிய நீர்மூழ்கி, டைட்டானிக் கப்பல் சிதைந்து கிடக்கும் பகுதிக்குள் சென்றுகொண்டிருந்தபோது, அது தன்னுடைய தகவல் தொடர்பை இழந்தது.
பிறகு தீவிர தேடுதல் பணியில் அந்த நீர்மூழ்கி உட்புறமாக ஏற்பட்ட வெடிப்பால் உடைந்து விபத்துக்கு உள்ளானது தெரிய வந்தது. இந்த விபத்தில் அதில் பயணித்த ஐந்து பேரும் இறந்துவிட்டனர்.
இந்த நீர்மூழ்கி ஓஷன்கேட் என்னும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



