You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விபத்தில் இறந்த மகனின் சாம்பலை நிலாவுக்கு அனுப்பும் தாய் - ஏன்?
சாலை விபத்தில் இறந்து போன தனது 16 வயது மகனின் சாம்பலை நிலவுக்கு அனுப்பும் தாயின் கதை பலரையும் கலங்க வைத்துள்ளது.
தனது மகனின் சாம்பலை வைத்து கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று சொல்லும் நதீன் ஆனந்த் நிலவுக்கு சாம்பலை அனுப்பும் சேவை மூலம் லியாமின் சாம்பலை நிலவுக்கு அனுப்ப இருக்கிறார்.
அவன் இதை பார்த்தால் அவனுக்கும் இது பிடிக்கும். இனி அவன் நினைவு வரும்போதெல்லாம் தலையை நிமிர்த்து நிலாவை பார்த்து கொள்வோம் என்று கூறுகிறார் நதீன்.
பெரிகிரைன் லேண்டர் மூலம் லியாம் சாம்பலோடு சேர்த்து மேலும் பலரின் சாம்பலும் நிலவில் தூவப்பட உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)