‘முடியாது என்று சொன்னார்கள், செய்து காட்டினேன்’ – பைக் ரேசிங்கில் சாதித்த சென்னை பெண் - காணொளி
‘நீ உயரமாக இல்லை அதனால் பைக் ஓட்ட முடியாது’ என்றார்கள். சொந்தமாக பைக் வாங்கி ஓட்டினேன்.
‘நீ ஒரு பெண், உனக்கு எதுக்கு பைக் ஓட்டும் வேலை?’ என்றார்கள். Yamaha Ybx Championshipபில் முதல் பெண் பைக் ரேசர் பட்டம் பெற்றேன்.
எனக்கான உரிமைகளைக் கேட்டு பேசும் போதோ, பெறும் போதோ, ‘நீ என்ன பெரிய லாயரா?’ என்றார்கள். இப்போது சட்டப்படிப்பு படித்து முடித்திருக்கிறேன்.
‘குழந்தை பெற்ற பிறகு பெண்ணால் கடின வேலைகளை செய்ய முடியாது,’ என்றார்கள். 118 மணி நேரத்தில் இந்தியாவில் உள்ள 5,900 கி.மீ. தங்க நாற்கர சாலைகளை கடந்த வேகமான பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறேன்
கண்களில் பெருமையுடன் பேசுகிறார் சௌந்தரி.
பல தடைகளைக் கடந்து, பைக் ஓட்ட வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், அதில் பல சாதனையையும் படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இந்த இளம்பெண்.
அவரது கதையை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார்.
தயாரிப்பு: ஹேமா ராகேஷ், பிபிசி தமிழுக்காக
ஒளிப்பதிவும் படத்தொகுப்பும்: ஜனார்த்தனன் மாதவன், பிபிசி தமிழுக்காக

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



