You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: டிரம்பை மீண்டும் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க விரும்பும் பாகிஸ்தான்
"நீங்கள் அன்று என்னிடம் சொன்னதை சொல்ல விரும்புகிறீர்களா?
அன்று சொன்னதை சொல்ல விரும்புகிறீர்களா?
அது நன்றாக இருந்தது." என கேட்கிறார் டிரம்ப்.
அதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் கூறுகையில், "இன்றைய தினம் சமகால வரலாற்றில் மிகச்சிறந்த நாட்களில் ஒன்று என கூறுவேன், ஏனென்றால் அதிபர் டிரம்ப் தலைமையிலான அயராத முயற்சிகளுக்கு பிறகு அமைதி எட்டப்பட்டுள்ளது. அவர் உண்மையிலேயே அமைதிக்கான மனிதர். இந்த உலகத்தை அமைதி மற்றும் செழிப்புடன் வாழ்வதற்கான இடமாக மாற்ற சமீப மாதங்களில் இடைவிடாமல் அயராது உழைத்தார்.
முதலில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தவும், பின்னர் அவரது அற்புதமான குழுவுடன் போர்நிறுத்தத்தை அடையவும் அவர் செய்த சிறந்த, அசாதாரண பங்களிப்புகளுக்காக டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்தது.
இன்று மீண்டும் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன், ஏனெனில் அவர் தெற்காசியாவில் மட்டும் அமைதியை ஏற்படுத்தவில்லை, மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு