காணொளி: உணவு கொடுக்க முயன்ற நபரை மிதித்து கொன்ற யானை

காணொளி: உணவு கொடுக்க முயன்ற நபரை மிதித்து கொன்ற யானை
பிரசுரிக்கப்பட்டது

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள சந்தன் நகர் பகுதியில் உணவு கொடுக்க முயன்ற நபரை யானை ஒன்று மிதித்து கொன்றுள்ளது. ஜூலை 26ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் 49 வயதான ஆட்டோ ஓட்டுநர் விஜய் ஹோல்கர் உயிரிழந்தார்.

ஓட்டுநர் விஜய் குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர் யானைக்கு வெல்லம் கொடுக்க சென்றுள்ளார். அப்போது, யானை தனது தும்பிக்கையால் அவரைத் தரையில் வீசி, மிதித்தது. விஜய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு